சங்குப்பூ என பரவலாக அறியப்படும் Butterfly Pea Flowerஇல் தயாரிக்கப்படும் blue டீ, இரத்தத்தில் உள்ள சக்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயின் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
ஒரு கப் தண்ணீருக்கு மூன்று அல்லது நான்கு சங்குப்பூக்களை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேவைப்பட்டால் தேன் சேர்த்து சூடாக blue டீயை குடிக்கும் போது கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Blue டீயில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக அதிகரிப்பதோடு கேன்சர் செல்கள் வளர்ச்சியையும் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
நினைவாற்றலை மீட்டெடுக்கும் தன்மை கொண்ட சங்குப்பூ தேநீரை தொடர்ச்சியாக குடித்து வர அல்சைமர் நோயின் தீவிரமும் குறைவதாக கூறப்படுகிறது.
அஜீரணக் கோளாறுகளை சீராக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் blue டீ, உடல் எடை குறைப்பில் கணிசமான பங்களிப்பை தருகிறது. மன அழுத்தத்தை குறைக்கும் blue டீயை குடித்த சில நிமிடங்களிலேயே நிம்மதியான உணர்வு ஏற்படும்.
Blue டீயில் உள்ள proanthocyanidin complexes கண்பார்வையை மேம்படுத்தவும், கண்களை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது. மேலும், மங்கலான பார்வை மற்றும் பல கண் பிரச்சினைகள் வராமல் தடுத்து, ஆரோக்கியத்தை அள்ளித் தரும் இந்த அழகான டீயை அவ்வப்போது உட்கொள்வது சிறப்பான பலன்களை தரும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.