Wednesday, January 15, 2025

நடிகர் கருணாஸ் மகளின் திருமணம்..வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

‘நந்தா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கருணாஸ் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

கருணாஸின் மகன், கென் கருணாஸ் ‘அசுரன்’ படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து, கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நிலையில் அவருக்கு மகள் இருப்பதே பலருக்கும் அவரின் திருமண செய்தியின் போது தான் தெரிந்துள்ளது.

கருணாஸ் grace தம்பதியினரின் மகளான டயானாவிற்கு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் வெகு சில நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest news