உடலின் சீரான இயக்கத்திற்கும் பல், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அத்தியாவசியமான சத்து கால்சியம். பால் கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால், பாலின் சுவை பிடிக்காத காரணத்தால் பலரும், Lactose Intolerance எனும் பால் ஒவ்வாமை காரணமாக சிலரும் அதைத் தவிர்த்து விடுகின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்க, கால்சியம் நிறைந்த மற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஒரு கிளாஸ் பாலில் 300 mg கால்சியம் இருக்கும் நிலையில், ஓன்றரை கப் கொண்டைக்கடலையில் 315 mg கால்சியம் உள்ளது. முள்ளங்கி போலவே காணப்படும் டர்னிப் காயின் கீரையை இரண்டு கப் அளவு சாப்பிட்டால் 394mg கால்சியத்தை பெறலாம். நார்ச்சத்து மற்றும் விட்டமின் E நிறைந்த பாதாமை முக்கால் கப் அளவிற்கு உணவில் சேர்த்து கொள்ளும் போது 320 mg கால்சியம் கிடைக்கிறது.
சல்மோன் மீன் என அழைக்கப்படும் காலா மீனின் ஒரு servingஇல் 340 mg வரை கால்சியம் உள்ளது. Anti oxidants நிறைந்துள்ள ஒன்றரை கப் உலர்ந்த அத்திப்பழங்களில் 320mg கால்சியம் சத்து இருக்கிறது.
இதையெல்லாம் விடவும், 100 கிராம் சியா விதைகளில் இருந்து அதிகபட்சமாக 631mg கால்சியம் கிடைக்கிறது. அதாவது 1 கிளாஸ் பால விட 3 ஸ்பூன் சியா விதைகளை உட்கொண்டால் அதிக கால்சியம் உடலில் சேருவதாக விளக்கம் அளிக்கும் உணவியல் நிபுணர்கள், பாலை தவிர்க்க நேர்ந்தாலும் இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.