Friday, December 27, 2024

நாளை மறுநாள் வரப்போகும் தரமான ‘தளபதி 67’ அப்டேட்! சம்பவம் Loading..

பொங்கலுக்கு வெளியான ‘வாரிசு’ பதினோரு நாட்களில் 250 கோடி வசூலை ஈட்டியதாக, படத் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அறிவிப்பு ஒரு புறம் இருக்க, ரசிகர்களின் கவனம் விஜயின் அடுத்த படமான ‘தளபதி 67’ஐ நோக்கி திரும்பியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் கதையையும், விக்ரம் படத்தின் கதையையும் இணைத்து எடுத்ததில் இருந்தே LCU, அதாவது Lokesh Cinematic Universe பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. ‘தளபதி 67’ LCU வில் இடம்பெறுமா அல்லது Standalone படமாக தயாராகிறதா என்ற கேள்வி நிலவி வந்தது.

இந்நிலையில், விக்ரம் படத்தில் நடித்த பாசிலிடம், அவர் தளபதி 67இல் இடம்பெற்றுள்ளாரா என கேட்கப்பட்டது. அதற்கு, LCUவின் கீழ் கதை வருவதால் தானும் அதில் இருக்கலாம் என கூறி பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் 26ஆம் தேதி தளபதி 67 பற்றிய அப்டேட் வர வாய்ப்புள்ளதாகவும், படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest news