Friday, December 27, 2024

வேற லெவல் ‘வாரிசு’ Remix செய்த தல! வைரலாகும் வீடியோ

ஜனவரி 11ஆம் தேதி ‘வாரிசு’ படம் ரிலீஸ் ஆவதை அடுத்து சமூகவலைதளங்களை வாரிசு vibe ஆக்கிரமித்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்த வாரிசு fever தல தோனியையும் தொற்றி கொண்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

கிரிக்கெட் வீரர் என்று மட்டும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்க்கப்பட்டு வருகிறார் தோனி. இதைப் புரிந்து கொண்டு தான், விஜய் மற்றும் தோனி ரசிகர்களுக்கு ஒருசேர ட்ரீட் கொடுத்துள்ளது CSK அணி.

வாரிசு ட்ரைலர் டயலாக்கை தோனியை வைத்து எடிட் செய்து, அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த வீடியோ ஐந்து லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CnBrUMkhYuL/?utm_source=ig_web_copy_link

Latest news