Wednesday, January 15, 2025

லாங் டிரைவிங்கின் போது தூங்காம இருக்க 5 டிப்ஸ்!

நீண்ட தூரம் பிரயாணம் போகும் போது, டிரைவிங் செய்பவர்களுக்கு தூக்கம் வந்துவிடுவது இயல்பு.

எனினும், சாதாரண விஷயமாக இதை அலட்சியம் செய்ய முடியாது. காரணம், டிரைவிங்கின் போது ஏற்படும் ஒரு நிமிட கவனச்சிதறல் பல விபத்துகளுக்கும், தவிர்த்திருக்க கூடிய உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைகிறது.

பயணக் களைப்பை போக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் டீ அல்லது coffee குடித்து பிரேக் எடுத்து கொள்ளலாம். வெகு நேரம் அமர்ந்திருந்து கார் ஓட்டும் போது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைய வாய்ப்புள்ளது.

அப்படியான மந்தமான உணர்வு ஏற்படும் போது, காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி நடந்தால் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். துள்ளலான இசை கொண்ட பாடல்களை கேட்டுக்கொண்டே கார் ஓட்டும்போது, மூளை துடிப்புடன் இயங்குவதால் தூக்கம் வருவது தவிர்க்கப்படும்.

உடன் பயணிப்பவர்கள் இருந்தால் அவர்களுடன் உரையாடி கொண்டே செல்வது பலனளிக்கும். ஆனால், அவ்வாறு பேசும்போது சாலையில் இருந்து கவனம் விலகாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பயணத்திற்கு முன்னும், பயணத்தின் போதும் அதிகப்படியான உணவை எடுத்துக் கொள்வது தூக்கம் வர வழிவகுக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழங்கள் போன்ற லேசான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

ட்ரைவ் செய்யும் போது மது, சிகரெட் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உடல் சோர்வாக இருந்தால் டிரைவிங் செய்வதை தவிர்த்து பயணத்திற்கான மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். லாங் டிரைவ் போவதற்கு முன் நல்ல உறக்கத்தை உறுதி செய்வதன் மூலமாகவும் பல விபத்துகளை தவிர்ப்பது சாத்தியமாகிறது.

Latest news