Friday, December 27, 2024

குளிர் காலத்துல Coffee குடிக்குறதால இவ்ளோ பாதிப்பா?

பொதுவாக குளிர்காலத்தில், அதிகப்படியான குளிரை சமாளிக்க சூடாக எதையாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயல்பை விட கூடுதலாக காபி, டீ அருந்துவது பலரது வழக்கம்.

ஆனால், சாதாரணமாக தெரியும் இப்பழக்கம் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. காப்பியில் உள்ள Caffeineஐ அதிக அளவில் உட்கொள்ளும் போது நீரிழப்பு, அஜீரணம், தூக்கமின்மை, கவலை, மற்றும் பதட்டமான மனநிலை ஏற்படும் சூழல் உருவாகிறது.

மேலும், குளிர்காலத்தில் உடல் வெப்பமான உணர்வை நாடுவதால் ஒரு முறை coffee குடித்தபின் அடிக்கடி குடிக்க வேண்டிய உணர்வு தானாகவே தூண்டப்படும். கூடுதலான caffeine பயன்பாடு தலைவலி, மயக்கம், நடுக்கம் போன்ற உடல் ரீதியான சிக்கல்களை கொண்டு வருவதோடு, எரிச்சலான மற்றும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் மனநிலையையும் ஏற்படுத்தும்.

இதனால், குளிர்காலத்தில் coffeeயை தவிர்த்து, குளிருக்கு இதமாக இருப்பதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் உறுதி செய்யும் மஞ்சள் பால்,  பாதாம் பால், ஊட்டச்சத்து மிக்க சூப் வகைகள் மற்றும் மூலிகை தேநீர் உள்ளிட்ட பானங்களை பருகுவது சிறப்பான பலன்களை தரும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Latest news