Wednesday, December 17, 2025

‘Beast’, ‘Money Heist’ வாடை தூக்கலா வீசுதே! ‘துணிவு’ ட்ரைலரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படமாக அமைந்துள்ளது ‘துணிவு’. பொங்கலுக்கு நேரடியாக மோதும் விஜயின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்களை பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகிய துணிவு ட்ரைலர், 24 மணி நேரங்களுக்குள்ளாக 30 மில்லியன் பார்வைகளை கடந்து, youtube ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்தின் பெரும்பான்மை திரைக்கதை ஷாப்பிங் மாலை சுற்றி நகர்வது போல துணிவு படம் வங்கியை சுற்றியே நகரும் என தெரிகிறது. Action காட்சிகளின் ஒற்றுமை, பணயக் கைதிகளாக மக்கள், செல்வராகவனை நினைப்பூட்டும் சமுத்திரக்கனி கதாபாத்திரம், அதிகாரத்தில் உள்ள அமைச்சர் போன்றவை பீஸ்ட் பட திரைக்கதை போலவே இருப்பதாக, நெட்டிசன்கள் இரு படங்களையும் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், வங்கி கொள்ளையை மையமாக கொண்ட சர்வதேச தொடரான ‘money heist’இன் சாயலும் அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related News

Latest News