இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட்டின் கார் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
சாலை தடுப்பில் மோதியதும் காரில் தீப்பற்றி எரிந்ததே விபத்து தீவிரமடைய காரணமாக அமைந்துள்ளது.
இந்த விபத்தினால் நெத்தியில் வெட்டுக்கள், வலது முட்டியில் ஜவ்வு கிழிதல், மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் பாதங்களில் காயங்களுக்கு உள்ளாகி இருக்கிறார் ரிஷப் பண்ட். சில தீக்காயங்களை எதிர்கொண்டாலுமே அவை சிறிய அளவிலான காயங்கள் என்றே கூறப்படுகிறது.
கார் ஓட்டும்போது ரிஷப் பண்ட் தூங்கி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக உத்தரகண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். Mercedes-AMG GLE43 ரக காரில் தூக்கமயக்கத்தில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டாலும், சமயோசிதமாக செயல்பட்டு காரின் WIndscreenஐ உடைத்ததாலேயே ரிஷப் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தது சாத்தியமாகி இருக்கிறது.
டேராடூனில் உள்ள Max மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் சிறு காயங்களோடு சுயநினைவில் இருப்பதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.