படத்திற்காக நிஜத்தில் Nuclear Explosion நிகழ்த்திய நோலன்!

178
Advertisement

Inception, Interstellar, Tenet, The Dark Knight போன்ற ஆகச் ஹாலிவுட் படங்களை உருவாக்கி உலக முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இயக்குனர் Christopher Nolan.

அடுத்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருப்பதும் நோலனின் ஆப்பன்ஹைமர் (Oppenheimer) தான்.

Peaky Blinders தொடரின் மூலம் பலருக்கும் அறிமுகமாகி இருந்தாலும் பெரும்பாலாலான நோலன் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தும் கில்லியன் மர்ஃபி (Cillian Murphy) தான் இந்த படத்தின் கதாநாயகன்.

இரண்டாம் உலகப்போரின் போது, Manhattan Projectஇல் ஈடுபட்டு அணுகுண்டு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி செய்ததற்காக, அணு ஆயுதத்தின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஆப்பன்ஹைமரை மையமாக கொண்டதே இப்படத்தின் கதைக்களம்.

சினிமாவில் பல புதிய பரிமாணங்களை லாவகமாக கையாளும் நோலன், இந்த படத்தில் Trinity Test என அழைக்கப்படும் முதல் அணு ஆயுத சோதனையை CGI தொழில்நுட்ப உதவியின்றி உண்மையில் நிகழ்த்தி காட்சிப்படுத்தி வருவதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இந்த காட்சிகளை எடுத்து முடிக்க இன்னும் சில காலம் எடுக்கும் என கூறியுள்ள நோலன், சவால் நிறைந்த இந்த முயற்சியில் இதுவரை கிடைத்துள்ள பலன் திருப்திகரமாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆப்பன்ஹைமர் திரைப்படம்  2023ஆம் ஆண்டு,  ஜூலை 21ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.