Sunday, April 20, 2025

இனி நடிக்கப் போவதில்லை! அமைச்சர் உதயநிதி அதிரடி முடிவு

அசைக்க முடியாத அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், இன்று அமைச்சராக பதவியேற்று தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

அரசியல் மட்டும் இல்லாமல் உதயநிதி சம்பந்தப்பட்டிருக்கும் இன்னொரு துறை சினிமா. நடிகராகவும் பல பெரும் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் Red Giants Movies தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கும் உதயநிதி, சினிமா தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ளார்.

இனி தான், திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என கூறியுள்ள அவர், கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வர உள்ள ‘மாமன்னன்’ தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்று உதயநிதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest news