Friday, July 4, 2025

துணிவு பட ரிலீஸ் பற்றி முதல் முறையாக மனம் திறந்த விஜய்!

விஜய் நடிக்கும் வாரிசு படமும் அஜித்குமாரின் துணிவு படமும் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆக இருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இரு தரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் போட்டி போட்டுகொண்டு தங்கள் அபிமான நடிகருக்காக வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வந்தாலும், இரு நடிகர்களும் தனிப்பட்ட விதத்தில் நட்புணர்வுடனேயே பழகி வருகின்றனர்.

பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கும் வாரிசு படத்தில் நடிகர் ஷ்யாமும் நடித்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஷ்யாம், துணிவு படம் ரிலீஸை பற்றி விஜயிடம் பேசுகையில் அவர் ‘ஹே ஜாலிப்பா, வரட்டும் பா…நம்ம நண்பர் தான அவர் படமும் நல்லா போட்டும் நம்ம படமும் நல்லா போட்டும்’ என கூறியதாக பகிர்ந்துள்ளார்.

சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவை பார்த்து விஜய்க்கு இவ்வளவு நல்ல மனசா என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news