Thursday, December 26, 2024

மீண்டும் அதிபராக முயற்சிக்கும் டிரம்ப்! 15ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு

அமெரிக்காவில் இடைத்தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிகாரத்தை கைப்பற்ற ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசு கட்சிக்கும் உச்சக்கட்ட பலப்பரீட்சை நடந்து வருகிறது.

இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சுறுசுறுப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தன் ஆட்சி காலத்தில், அமெரிக்காவுடனான வடகொரியாவின் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது என அதுவரை இல்லாத பல முன்னெடுப்புத் திட்டங்களை செயல்படுத்தி சர்வதேச கவனம் ஈர்த்த டிரம்ப் அவ்வப்போது வெளிப்படுத்தும் தனது அதிரடி நடவடிக்கைகளால் வேண்டாத விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொள்வதும் வாடிக்கை தான்.

எது எப்படியோ, உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வந்த டிரம்ப், நவம்பர் 15ஆம் தேதி, Floridaவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தான் பேசிய பிரச்சார கூட்டம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த டிரம்ப், திரும்பவும் அதிபருக்கு போட்டியிடுவது பற்றி தொடர்ந்து பேசி வந்தார். இதனால், டிரம்ப் அதிபருக்கு போட்டியிடுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.

Latest news