Saturday, May 10, 2025

உலகின் கவர்ச்சியான ஆண் இவர் தான்! பிரபல பத்திரிகை அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான People’s Magazine இந்த வருடத்திற்கான கவர்ச்சியான ஆணை அறிவித்துள்ளது.

கிரிஸ் இவான்ஸ் (Chris Evans) என்பதை விட Captain America என்றால் பலரால் அறியப்படும் பிரபல ஹாலிவுட் நடிகர் தான் இந்த வருடத்திற்கான கவர்ச்சியான ஆண் பட்டத்தை தட்டி சென்றுள்ள நபர்.

இது குறித்து பேசியுள்ள கிரிஸ் இவான்ஸ், வயதான பிறகு இந்த பட்டத்தை பெருமையுடன் திரும்பி பார்ப்பேன் என்றும், இதைப் பற்றி தனது மிகப்பெரிய Fan ஆன தனது தாயிடம் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கடந்த வருட கவர்ச்சியான ஆண் பட்டத்தை, மார்வல் படத்தொடரான Ant Manஇல் நடித்த பால் ரட் (Paul Rudd) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news