Wednesday, January 15, 2025

கிருமிகளை வைத்து Creativty காட்டும் பெண்!

பாக்டீரியா என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கும் அருவருப்பான உணர்வு தோன்றும்.

ஆனால், ஸ்காட்லாந்தை சேர்ந்த க்ளோ பிட்ஸ்பாட்ரிக் (Chloe Fitzpatrick) என்ற வடிவமைப்பாளர், பாக்டீரியாவை வளர்த்து அதன் வர்ணங்களை சேகரித்து அணிகலன்கள் செய்து அசத்தி வருகிறார்.

இதற்காக இவர், டண்டீ பல்கலைக்கழகம் (Dundee University) மற்றும் ஜேம்ஸ் ஹட்டன் அமைப்பு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

தேவையான பாக்டீரியாவை செடிகளிடமும் தன் உடலில் இருந்துமே எடுத்ததாக கூறும் க்ளோ, பரவலாக பயன்படுத்தப்படும் ரசாயன வர்ணப்பூச்சுகளுக்கு பாக்டீரியா மூலம் இயற்கையாக கிடைக்கும் வர்ணம் சிறந்த மாற்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.

Latest news