9\11 அல்லது இரட்டை கோபுர தாக்குதல் என அழைக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உலக வணிக மையத்தின் மீது, இதே நாளில் 13 வருடங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட தாக்குதல், வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத தாக்குதலாக உள்ளது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த 19 நபர்கள், நான்கு வணிக விமானங்களை கடத்தி அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்க திட்டமிட்டனர். அதில் முதல் இரண்டு விமானங்கள், உலக வணிக மையத்தின் 93 மற்றும் 94வது தளங்களை காலையில் தாக்கின.
மூன்றாவது விமானம் விர்ஜினியாவில் உள்ள பென்டகனை தாக்க, முன்னதாக வெள்ளை மாளிகையை குறிவைத்திருந்த நான்காவது விமானத்தை தீவிரவாதிகளே தகர்த்து விட்டனர். தாக்குதல் நடக்கும் போது வணிக வளாகத்திற்குள் கிட்டத்தட்ட 18,000 மக்கள் வரை இருந்தனர்.
ஒட்டுமொத்தமாக 9\11 தாக்குதல்களில் 93 நாடுகளை சேர்ந்த 2977 மக்கள் கொல்லப்பட்டனர். உலகையே உறைய வைத்த இந்த தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்ட அமெரிக்க அரசு, உள்நாட்டு பாதுகாப்பில் உச்சகட்ட கவனம் செலுத்தியது.
அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ராணுவ Operationகளின் பலனாக 2011ஆம் ஆண்டு அப்போதைய அல்கொய்தா தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். தொடர்ச்சியான புலனாய்வில் பல 9\11 தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், அண்மையில் ஆகஸ்ட் மாதத்தில் அய்மான் அல் சவாஹிரியும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.