Saturday, December 21, 2024

பிரஷர் குக்கர் பயன்படுத்தி உணவு சமைப்பதனால் உடலில் ஏற்படும் விளைவுகள்

இந்த காலத்தில் ஆண்கள் மட்டுமின்றி வீட்டிலிருக்கும் பெண்களும் வேலைக்கு செல்வதால் வீட்டில் இருக்கும் வேலையையும் பார்த்து விட்டு பணிக்கு  தாமதமாகாமல் நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதாலும் , சமைக்க கூட போதிய நேரம் இல்லாததனாலும் , நாம் பாரம்பரியமாக சமைக்கும் முறையில்  நேரம் அதிகம் தேவைப்படுவதனால் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவே  அரிசியையும் , காய்கறிகளையும்  சமைக்க பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றார்கள் . அரிசி , உருளை கிழங்கு , வாழைக்காய் போன்றவற்றில் அதிகளவு ஸ்டார்ச் நிறைந்துள்ளது . இது போன்ற  ஸ்டார்ச் நிறைத்த உணவுப் பொருட்களை பிரஷர் குக்கரில் சமைக்கும் போது கார்போஹைட்ரேட் அதிகம் உடலில் சேர்ந்துவிடுகிறது . தொடர்ந்து கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிப்பதால் உடல்எடை அதிகரிக்கும். சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற வாழ்வியல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் உடல் எடை அதிகரிப்பதுதான் முக்கியக் காரணமாக உள்ளது.  நூற்றுக்கு 90 பேர் சரியான எடையைப் பராமரிப்பதில்லை, உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு இதுபோன்ற பிரஷர் குக்கரில் சமைத்த உணவுகளை உட்கொள்ளும்   பழக்கத்தைப் பின்பற்றாமல் இருப்பதுதான் நல்லது. 

Latest news