கண் பார்வை குறைபாட்டுக்கு வந்தாச்சு தீர்வு!

273
Advertisement

University College Londonஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கண்பார்வை குறைபாட்டை இயற்கையாக, சுலபமாக மற்றும் பாதுகாப்பாக மேம்படுத்தும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆய்வுகளை பற்றிய முழு விவரங்களை The Journal Of Gerontology என்னும் ஆய்வு இதழில் சமர்ப்பித்துள்ளனர்.

2050ஆம் ஆண்டிற்குள், ஆறு பேரில் ஒருவர் 60 வயதை தாண்டியவராக இருப்பார் என ஐநா தெரிவித்துள்ளது.

40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே பார்வையில் குறைபாடு ஏற்படுவது இயல்பு என்பதால், கண்பார்வை குறைபாடுகளை சரிசெய்ய அடுத்த கட்ட அறிவியல் வளர்ச்சி அவசியமாகிறது.

லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கண்களில் குறிப்பிட்ட அலைநீளத்தில் ஆழமான சிகப்பு நிற LED வெளிச்சத்தை செலுத்துவதால், பார்வை திறன் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

நம் கண்களின் ரெட்டினா விழித்திரையில் உள்ள மைட்டோகாண்ட்ரியா தேவையான வெளிச்சத்தை உள்வாங்கினால் திறம்பட செய்லபடுவதை கண்டறிந்த விஞ்ஞானிகள் இந்த சோதனையை 28 வயதில் இருந்து 72 வயது வரையும் உள்ள, நபர்களிடம் நடத்தினர்.

சோதனை நடத்தப்பட்ட நபர்களுக்கு பார்வை குறைபாட்டை தவிர பிற கண் பாதிப்புகள் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், ஒரு நாளைக்கு மூன்று நிமிடம், கண்களை மூடிக்  கொண்டோ திறந்தோ சிகப்பு நிற வெளிச்சத்தக்கு கண்களை உட்படுத்தினர். இந்த ஆய்வு முடிவில், 40 வயதை கடந்தவர்களிடம், 20 சதவீதம் பேருக்கு பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிகப்பு நிற வெளிச்சம், மைட்டோகாண்ட்ரியாவிற்கு தேவையான ஆற்றலை அளிப்பதாகவும், அதனால் கண்களின் துல்லிய தன்மை மேம்படுவதாகவும் கூறும் விஞ்ஞானிகள், தொடர்ந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டால் கண் சிகிச்சை துறையில் சிறப்பான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.