உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் சூழலில் கிரிப்டோ கரன்சியும் விதிவிலக்கல்ல.
லாபத்தில் சென்று பல முதலீட்டாளர்களை தன்வசம் கவர்ந்திழுத்த கிரிப்டோவின் நிலையும் தற்போது கவலைக்கிடமாக தான் உள்ளது.
இந்நிலையில், எப்படியாவது மற்றவர்களிடம் இருக்கும் கிரிப்டோ பணத்தை கொள்ளையாட ஒரு மர்ம கும்பல் களம் இறங்கியுள்ளது. ட்விட்டரில் ஆசிய பெண்கள் என்ற போலி அடையாளத்தை பயன்படுத்தும் இந்த கும்பல், கிரிப்டோ முதலீடு செய்துள்ள ஆண்களை குறிவைத்து அவர்களுக்கு மெசேஜ் அனுப்புகின்றன.
ஆண்களின் நம்பிக்கையை பெற காதல் வார்த்தைகளை பேசும் இந்த போலி கணக்குகள் நாளடைவில் கிரிப்டோவை பற்றி பேச துவங்குகின்றன. புதிய கவர்ச்சியான திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக கூறி, இந்த கணக்குகளில் இருந்து அனுப்பப்படும் linkஐ எதிர்முனையில் இருப்பவர் கிளிக் செய்வதுடன், அவரின் கிரிப்டோ பணம் முழுதும், இந்த கும்பலால் சூறையாடப்படுகிறது.
இது போன்ற மோசடிகளிடம் இருந்து தப்பிக்க சமூகவலைத்தளங்களில் தெரியாத பெண்களிடம் இருந்து கிரிப்டோ சார்ந்த தகவல்கள் தொடர்பாக வரும் மெசேஜ்களை, ஆண்கள் அபாய மணியாக கருத வேண்டும் என கூறும் சைபர் கிரைம் நிபுணர்கள், குறிப்பாக சந்தேகத்திற்கிடமான linkகுகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் அறிவுறுத்துகின்றனர்.