குரோஷியா நாட்டில் இருக்கும் செட்டினா நதியின் நீரூற்று அசாதாரணமான வடிவம் மற்றும் நிறத்தை கொண்டுள்ளது.
65 மைல் பரப்பளவு கொண்டுள்ள இந்நீரூற்றின் தண்ணீர், குரோஷியாவின் உயரிய தினாரா மலையடிவாரத்தில் ஓடி அட்ரியாடிக் கடலில் கலக்கிறது.
நீலம் மற்றும் டர்கோய்ஸ் நிறத்தில் கண் போன்று காட்சியளிக்கும் இந்த நீரூற்று பூமியின் கண் என அழைக்கப்படுகிறது.
மேலிருந்து பார்க்கும் போது இது பிரமிப்பான அனுபவமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நீருற்றுக்கு அருகில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த தேவாலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது.