உடலில் உள்ள உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்கு கொழுப்பு சத்து அவசியம்.
HDL, LDL என்ற இரண்டு வகையான கொழுப்பில் HDL உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பாக பார்க்கப்படுகிறது.
ஆனால், LDL கொழுப்பின் அளவு உயரும் போது நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், ஞாபக மறதி, வயிற்றுவலி, பித்தப்பை கற்கள் போன்ற பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் காலை உணவுக்கு நார்ச்சத்து மிகுந்த ஓட்ஸ் கஞ்சி எடுத்து கொண்டால், அடிக்கடி பசி எடுப்பது தவிர்க்கப்படுவதால் கொழுப்பும் கணிசமாக குறைகிறது.
பார்லி போன்ற சிறுதானியங்களையும் வழக்கமாக உணவில் சேர்த்து கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பீன்ஸ், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் குறைவான கலோரிகளையும் அதிக நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் கொழுப்பு கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்றவற்றை தினமும் 2 அவுன்ஸ் அளவு சாப்பிட்டு வந்தாலே 5 சதவீதம் வரை LDL கொழுப்பு குறைவதாக கூறும் மருத்துவர்கள், வெண்ணை உட்கொள்வதை தவிர்த்து சமையலுக்கு சூரியகாந்தி அல்லது கனோலா எண்ணெய் பயன்படுத்துவது மற்றும் ஆப்பிள், திராட்சை, ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் பழ வகைகளை சாப்பிடுவது சிறப்பான பலன்களை தரும் என அறிவுறுத்துகின்றனர்.