விளம்பரங்களில் நடிக்க பெண்களுக்கு தடை

286
Advertisement

ஒரு பெண் ஹிஜாப் அணிந்து கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிடுவது போன்ற விளம்பரம் அண்மையில் ஈரானில் வெளியாகியுள்ளது.

இது கலாச்சார சீர்கேடு எனவும், பெண்கள் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பது ஆண்களை சபலப்படுத்துவதாக அமைவதாகவும் கூறி இனி பெண்கள் விளம்பரங்களில் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு.

இது மட்டும் இல்லாமல், தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கும் பல விநோதமான விதிமுறைகளை வகுத்துள்ள நாடு ஈரான்.

பீட்ஸா, sandwich போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது, சிகப்பு நிற பானங்களை பருக கூடாது போன்ற விதிகளும் இதில் அடங்கும். மேலும், தோல் கையுறைகளை அணியவும் பெண்களுக்கு அனுமதி இல்லை.

1979 முதலே ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஈரானில், பெண்கள் ஹிஜாபை நீக்கினாலோ தன்னை படமெடுத்தாலோ 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை செயல்படுத்தப்படுகிறது.

பல வருடங்களாக இந்த சூழலை எதிர்த்து போராடி வந்தாலும், பெரிய மாற்றங்கள் இன்னும் தூரமாகவே இருப்பது கவலை அளிப்பதாக பெண்ணுரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.