Monday, May 12, 2025

சாப்பிட்ட உடனே நடந்தா இவ்ளோ நல்லதா?

பொதுவாக சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கு இடையே இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டு.

ஆனால், அந்த இரண்டு மணி நேரத்தில் உட்கார்ந்து இருப்பதை விட, எழுந்து நடந்தால் ஏற்படும் பயன்களை கேட்டால் அப்புறம் சாப்பிட்ட பிறகு உட்காரவே மாட்டீர்கள்.

அதிலும், அதிக அளவில் சக்கரை நோயாளிகள் இருக்கும் இந்தியாவில் சாப்பிட்ட பிறகு உயரும் சக்கரை அளவு வேறு பல உடல் உபாதைகளை தீவிரமடைய செய்கிறது.

உணவு உட்கொண்ட பின், 60 முதல் 90 நிமிடங்கள் வரை நடப்பதால் சீரான செரிமானத்தை உறுதி செய்வதோடு, சக்கரை அளவு உயர்வையும் கட்டுப்படுத்த முடியும் என கூறும் மருத்துவர்கள், இதய நோய் இருப்பவர்களுக்கு மூளைக்கு செல்லும் இரத்தம் திசை திருப்பப்பட கூடும் என்பதால் அவர்கள் சாப்பிட்ட உடன் நடப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

Latest news