நமது ரத்தத்தில் உள்ள சக்கரை அளவு அதிகரிக்கும் போது, கணையத்தில் சுரக்கும் இன்சுலின் சக்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக்குகிறது.
உடலில் உயரும் சக்கரை அளவிற்கு ஏற்ப, கணயத்தால் இன்சுலின் சுரக்க முடியவில்லை என்றால் அதைத் தான் சக்கரை நோய் என அழைக்கிறோம்.
பொதுவாக, சக்கரை அளவு அதிகமாக உயர்ந்தோ இல்லை குறைந்தோ போகும் போது மயக்கம், தலைசுற்றல் போன்ற தீவிர அறிகுறிகள் மட்டுமே கவனத்தை ஈர்க்கும் நிலையில், அன்றாட வாழ்க்கையில் சக்கரை நோயின் பல அறிகுறிகள் அலட்சியம் செய்யப்படுகிறது.
தீராத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் தொடர்ச்சியான பசி ஆகியவை சக்கரை நோயின் பிரதான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
மேலும், திடீரென ஏற்படும் உடல் எடை குறைவு, காயங்கள் ஆறுவதில் தாமதம் மற்றும் அதிகப்படியான சோர்வு நேரும் போது உடனடியாக மருத்துவரை அணுகி, சக்கரை அளவை பரிசோதித்து கொள்வதால் உடல்நிலை மோசமடைவதை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.