Tuesday, April 22, 2025

அந்தரத்தில் நடந்த அசத்தலான சாகசத் திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என தெரியவில்லை ஆனால், திருமணத்தை வானத்திலேயே நடத்த முடியும் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த ரயன் கிம் தம்பதியினர்.

2018இல் நடந்த இந்த வித்தியாசமான கல்யாணத்தின் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் இன்னும் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது. 400 அடி உயரத்தில் மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள Spacenet எனப்படும் பிரத்யேக வலையின் மீது ஒட்டு மொத்த திருமண நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒழுங்கு செய்யப்படிருந்த பல சாகச விளையாட்டுகள் கூடுதல் சுவாரஸ்யம். தம்பதிகள் இருவரும் Spacenet வலையின் மீது நடக்கும் Slackline சாகசத்தில் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/watch/?v=1591637784476269

Latest news