வேப்பிலையின் பூ, பட்டை, இலை, காய் என ஒவ்வொரு அங்கமும் அரிய மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.
இயற்கையாகவே கிருமி நாசினியாக செயல்படும் வேப்பிலை அஜீரண கோளாறு மற்றும் புண்களை குணப்படுத்துகின்றது.
மேலும், வேப்பிலையை உட்கொவதால் ரத்த சக்கரை அளவுகள் குறைவதோடு வேப்பங்குச்சியால் பல் விளக்கும் போது மேம்பட்ட பல் ஆரோக்கியம் சாத்தியமாகிறது.
கிருமிகள் ஏற்படுத்தக் கூடிய பல்வேறு நோய் தொற்றுகளிடமும் சரும பாதிப்புகளிடம் இருந்தும் பாதுகாக்கும் வேம்பை அன்றாட வாழ்க்கையில் எப்படி சுலபமாக பயன்படுத்துவது என்பதை இத்தொகுப்பில் காண்போம்.
வேப்ப இலைகளை காய வைத்து அரைத்து சருமத்தில் தேன் கலந்து பூசலாம். குளிக்கும் சுடு தண்ணீரில் சில வேப்ப இலைகளை சேர்ப்பது, அதிக கிருமிகளை அழித்து சிறப்பான பலன்களை தரும். அதே நீரை குளிர்ந்த உடன் தலைக்கு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
வேம்பு கஷாயம் போட்டு குடித்தால் பருவ மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சளி, இருமல் சரியாகும். வேம்பு பொடியுடன் மஞ்சள், சந்தனம், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து பேக் போல முகத்தில் போட்டு வந்தால் முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சினைகள் மறைந்து முகம் தெளிவாகும்.
இத்தகைய சிறப்பம்சங்களை பெற்றுள்ள வேப்பிலையை ஒவ்வாமை இருப்பவர்கள், கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டும் என ஆயுர்வேத மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.