அல் நாஸ்லா எனும் அதிசயப் பாறை

306
Advertisement

சவுதி அரேபியாவில், தைமா பகுதியில் உள்ள அல் நாஸ்லா என்ற பிரம்மாண்ட பாறை, பல ஆண்டுகளாக  விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக விளங்கி வருகிறது.

4000 வருடங்கள் பழமையான இந்த பாறை 30 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்டுள்ளது.

இந்த பாறையின் இடையே உள்ள ஒரு மெல்லிய பிளவு, மேலிருந்து கீழ் வரைக்கும் ஒரே சீராக இருப்பது தான் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அம்சமாக அமைந்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் எப்படி இவ்வளவு வலுவான பாறையை இரண்டாக பிரித்திருக்க முடியும் என்ற கேள்வி தான் இந்த பாறையை சுற்றி சுழலும் சுவாரஸ்யமான மர்மம்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகக்தை சேர்ந்த லூயிஸ் என்ற ஆராய்ச்சியாளர், பருவ நிலை மாற்றத்தின் விளைவு காரணமாக, freeze thaw என்றழைக்கப்படும் பனி உருகி பாறையின் நடுவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீர் தொடர்ந்து ஓடும் நிகழ்வினால் பாறை பிளவு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக விளக்கியுள்ளார்.

எனினும், இது தான் பிளவிற்கான காரணம் என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில், இப்பாறையில் மனிதர்கள் மற்றும் குதிரைகளின் முகங்கள் செதுக்கப்பட்டிருப்பது கூர்ந்து கவனித்தால் தெரியும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.