SIM Swapping மோசடியில் இருந்து தப்புவது எப்படி?

234
Advertisement

நாளொரு விதமாக உருவெடுக்கும் சைபர் கிரைமில் தற்போது முன்னணி வகிப்பது Sim swapping.

இந்த முறையில், சைபர் கிரிமினல்கள் மக்களின் சிம் கார்டின் டூப்ளிகேட் சிம்மை உருவாக்கி, பின் அதில் கிடைக்கும் வங்கி விவரங்களை வைத்து பணத்தை திருடுவது வழக்கம்.

சிம் கார்டை டூப்ளிகேட் செய்து விடுவதால் OTP Verification செய்வதில் எந்த சிக்கலும் இல்லாமல், பணத்தை கைமாற்றி விடும் இந்த கிரிமினல்களின் வலையில் விழாமல் இருக்க சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

Network Coverage சரியாக இருக்கும் போது உங்கள் மொபைலில் மட்டும் சிக்னல் இல்லாமல் இருந்தால், அது சிம் டூப்ளிகேட் செய்யப்பட்டதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டால், வங்கியை தொடர்பு கொண்டு பண பரிவர்த்தனையை தடுப்பது மற்றும் மொபைல் connection பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

https என துவங்காமல் http என துவங்கும் இணையதளங்களை கிளிக் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தெரிந்த நபர்களிடம் இருந்து வந்தாலும் எழுத்துப்பிழையுடன் வரும் மின்னஞ்சல்களை எச்சரிக்கையாக அணுக வேண்டும்.

அதே போல வழக்கத்திற்கு மாறாக தோன்றும் லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பதே hack, sim swapping என பல சைபர் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கும் வழி என சைபர் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.