இந்திய பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவு, வெகு காலமாகவே சுற்றுலாவாசிகளின் கனவு தேசமாக விளங்கி வருகிறது.
மிதமான தட்ப வெட்ப நிலை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சூழல் கொண்ட மாலத்தீவு, கோவிட் பெருந்தொற்று காலம் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்திய சரிவில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈர்க்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
கடலில் இருந்து பிரிந்துள்ள 500 ஏக்கர் உப்புநீர் ஏரியில், கிட்டத்தட்ட 5000 வீடுகள் வரை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. Dutch Docklands நிறுவனமும், மாலத்தீவு அரசும் இணைந்து உருவாக்கும் இந்த நகரத்தில் கார் ஓட்ட அனுமதியில்லை.
மிதிவண்டி, படகு மற்றும் மின்சார வாகனங்களில் மட்டுமே பயணிக்கலாம். இந்த projectஇன் கீழ் கட்டப்படும் முதல் வீடு, ஆகஸ்ட் மாதம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட இருந்தாலும், அனைத்து வீடுகளும் 2027ஆம் ஆண்டில் தான் கட்டி முடிக்கப்படும் என மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நகரம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில், உலகிலேயே முதல் மிதக்கும் நகரம் உள்ள நாடு என்ற பெருமையை மாலத்தீவு பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.