19 வயது இளைஞனைக் காதலித்துவரும் 76 வயது மூதாட்டி,
விரைவில் அந்த இளைஞனைத் திருமணம் செய்யவுள்ளார்.
பொதுவாக, காதலுக்கு கண், மூக்கு எதுவும் கிடையாது என்பார்கள்.
ஆனால், எந்த வயதிலும் எந்த வயதினரையும் காதலிக்கலாம்,
கல்யாணம் செய்துகொள்ளலாம் என்கிற போக்கு அண்மைக்
காலமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த 76 வயது மூதாட்டியைக்
காதலித்து வரும் 19 வயது இளைஞனான கியுசெப் டி அன்னாவின்
நிச்சயதார்த்தத் தகவலை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் மூதாட்டியிடம் தான் காதலை வெளிப்படுத்திய புகைப்
படத்தைப் பதிவிட்டு, இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம் மட்டுமே
என்றுகூறி, அவருக்கு அளித்த வைரமோதிரம் ஆகியவற்றின்
வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
உண்மையான காதலுக்கு வயது தடையில்லை என்கிறார்கள் இந்த
விநோதக் காதலர்கள். இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது
இவர்களின் காதல் ரொமான்ஸ் வீடியோ.
இவர்களின் வீடியோவைப் பார்த்து ஏக்கத்தோடு கமெண்ட் செய்து
வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்.