வாழ்நாளில் ஒரே முறை- வெறும் ரூ.26 கட்டணத்தில் விமான பயணம் !

256
Advertisement

பலருக்கும் விமானத்தில் பயணம்  செய்யவேண்டும் என்பது கனவாக இருக்கும்.மற்றவையை காட்டிலும் கட்டணம் சற்று அதிகம் என்பதால் சிலர் கனவு கனவாகவே உள்ளது.அவர்களுக்காகவே தற்போது விமான நிறுவனம் ஒன்று வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வழங்கமுடியும் போன்ற சலுகை ஒன்று அறிவித்துள்ளது.

வெறும் 26 ரூபாயில் விமான பயணம் செய்யலாம் என்பது தான் அந்த அறிவிப்பு. இந்தியாவிலிருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு செல்லலாம் என அறிவித்துள்ளது வியட்ஜெட் விமான நிறுவனம்.

ஜூலை மாதத்தில் இரட்டை 7/7 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் ஒரு வார கால டிக்கெட் தள்ளுபடியை 777,777 விமான பயணிகளுக்கு வெறும் ரூ. 26 கட்டணம் மட்டுமே வசூலிக்க உள்ளது.இந்த சிறப்பு டிக்கெட்டுகள் வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் அனைத்து சர்வதேச வழிகளிலும் முன்பதிவு செய்ய செல்லுபடியாகும்.

ஜூலை 7 முதல் ஜூலை 13 வரை இந்த சிறப்பு கட்டண டிக்கெட்டுக்களை பெற்று கொள்ளலாம். பயணத்திற்கான கால அளவு ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை ஆகும்.www.vietjetair.com என்ற இணையதளம் மற்றும்   வியட்ஜெட் ஏர் என்ற மொபைல் செயலி மூலமும்  இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியா, கொரியா குடியரசு, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில்  சிறப்பு டிக்கெட்டுக்களை எடுத்து கொள்ளலாம். தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் சலுகை டிக்கெட்டுக்கள் கிடையாது.வியட்ஜெட் நிறுவனம் இந்திய நகரங்களான மும்பை மற்றும் வியட்நாமிய நகரமான ஹோ சி மின் நகரம்/ஹனோய் மற்றும் புது தில்லி/மும்பை முதல் ஃபூ குவோக் வரை சேவை செய்து வருகிறது.

புது தில்லியை ஹோ சி மின் நகரம் / ஹனோய் உடன் இணைக்கும் இரு நாடுகளின் முதல் நேரடி விமானச் சேவை ஏப்ரல் மாதமே தொடங்கியது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு வாரமும் 3 முதல் 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை-ஃபு குவோக் வழித்தடத்தில் 4 வாராந்திர விமானங்கள் தொடங்கும். புது தில்லி மற்றும் Phu Quoc இடையேயான சேவைகளும் செப்டம்பர் 9, 2022 முதல் தொடங்கவுள்ளது. இந்த விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.