விமானத்தில் பெரிய ஓட்டை இருக்கிறது கூட தெரியாமல்  ஓட்டிச்சென்ற விமானிகள்

420
Advertisement

உயரம் ,நடுவானில் இருக்கை குலுங்கினால் பயம்… போன்ற காரணத்தினால் விமான  பயணம் பலருக்கு  சவாலான ஒன்றாக இருக்கிறது, விமானத்தில் ஏற்படும் சிறு கோளாறு கூட ஒட்டுமொத்த பயணிகளின் உயிரை பறித்துவிடும்.இந்நிலையில், நடுவானில் ஏற்பட்ட பெரிய   துளையுடன்  விமானம் 14 மணி நேரம் வானில்பறந்து சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த  சனிக்கிழமை  துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற  பயணிகள்  தரையிறங்கும் பொது அதிர்ச்சி காத்திருந்தது.ஆம் விமானத்தின் ஒரு பகுதியில் பெரிய துளை இருந்துள்ளது. இந்த துளையுடன் விமானம் 14 மணி நேரம் பயணம் செய்துள்ளது.

விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களில் பலத்த இடிபோன்ற சப்தத்தை கேட்டதாகவும் விமானத்தில் பயணித்த பயணிகள் தெரிவித்தனர். இந்த  விபத்து குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறுகையில் ,  விமானத்தின்  டய்ர்களில் ஒன்று பயணத்தின் போது வெடித்தன் காரணாமாக பேரிங்கின் ஒரு பகுதி விமானத்தில் துளையை ஏற்படுத்தியுள்ளது மற்றும் விமானத்தின் உள் அமைப்பிற்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியுள்ளனர் .