ரோபோ நாய் ஒன்று கோவிட்19 நெறிமுறைகளை
அறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோன்றிய இடமான சீனாவில் மீண்டும் கோவிட்19 வைரஸ்
அசுர வேகத்தில் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பல
நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29 ஆம்
தேதி ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அப்போது ஷாங்காய் நகரத் தெருக்களில் ரோபோ நாய் ஒன்று
முகமூடி அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், வெப்ப
நிலையை சரிபார்த்தல் போன்ற நெறிமுறைகளைக் குரைத்தபடி
சென்றது.
அதாவது, சீன மொழியில் பதிவுசெய்யப்பட்ட நெறிமுறைகளை
ஒலிபெருக்கி வாயிலாக நகரம் முழுவதும் குரைத்தபடி சென்றது.
மக்களின் கவனத்தைப் பெரிதும் இந்த ரோபோ நாயின் அறிவிப்புகள்
ஈர்த்தன.
கொரோனாவுக்கெதிரான போரில் ரோபோவின் பங்களிப்பும்
இன்றியமையாததாகி உள்ளது.