Saturday, August 9, 2025
HTML tutorial

காதலனைத் தாக்கிய பெண்ணைத் தாக்கிய உணவு டெலிவரி பையன்

பொது இடத்தில் காதலனைத் தாக்கிய பெண்ணை உணவுடெலிவரி பையன்
தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசாவில் புவனேஸ்வரி நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் ஓர் இளம்பெண்
தன் காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். தகாத வார்த்தைகளால் திட்டுவதும்
ஆவேசமாகக் கத்துவதுமாக இருந்தாள். ஒருகட்டத்தில் திடீரென்று தன் காதலனைத் தாக்கத்
தொடங்கினாள். கல்லை எடுத்துக் காதலன்மீது எறிந்தாள். பொதுமக்கள் இந்த சம்பவத்தைத்
தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்
அந்த வழியாக வந்தான். காதலனை அடிக்கும் அந்தப் பெண்ணை சமாதானம் செய்ய
முயன்றான்.

ஆனால், அப்பெண் சமாதானம் அடையவில்லை. மாறாக அவளின் கோபம் உணவு டெலிவரி
செய்யும் இளைஞரின்மீது திரும்பியது. உணவுடெலிவரி பையனைத் திட்டத் தொடங்கினாள்.

இதனால் பொறுமை இழந்த உணவு டெலிவரி பையன் அந்தப் பெண்ணைத் தாக்கத்
தொடங்கினான். அவளைத் தள்ளிவிட்டு அவளின் முதுகில் குத்தினான். பின்னர், கன்னத்தில்
மீண்டும் மீண்டும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள்
தலையிட்டு அவர்களை விலக்கிவிட்டனர்.

இதற்கிடையே அங்கிருந்த அந்தப் பெண்ணின் காதலன் நழுவிச்சென்றுவிட்டான்.

இந்தச் சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டு அங்குவந்த போலீசார் மூவர்மீதும் வழக்குப்
பதிவுசெய்துவிட்டனர்.

எதற்காக காதலனை அடித்தாள் என்கிற விவரம் வெளியாக வில்லை. ‘காதல்ல இதெல்லாம்
சகஜமப்பா’ என்கிறார் அனுபவஸ்தர் ஒருவர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News