சுகாதாரத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்ற காந்தியின் கருத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, 1920ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த ஜீவன்மால், தன்னுடைய நான்கு மகன்களையும் மருத்துவராக்க முடிவு செய்தார்.
அப்போதில் இருந்து சேவையையே வழக்கமாக்கிய அந்த குடும்பத்தார், ஜீவன்மால் மருத்துவமனையை நிறுவியது மட்டுமின்றி, 102 ஆண்டுகளாக தலைமுறைகளை தாண்டி, குடும்ப நபர்கள் அனைவரும் மருத்துவ பணியையே மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பத்தில் எல்லாரும் மருத்துவராக இருப்பது சவாலாக இருந்தாலும், மனநிறைவை தருவதாக ஜீவான்மால் குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொரோனா காலகட்டத்தில், மருத்துவ சேவையில், குடும்பத்தில் இருவரை இழந்தாலும், தங்கள் சேவை இன்னும் தொடரும் என உறுதி அளிக்கிறது, இதுவரை 150 மருத்துவர்களை நாட்டிற்கு அர்பணித்துள்ள இந்த மருத்துவ குடும்பம்.
டெல்லி ஜீவன்மால் மருத்துவமனை, பணம் இல்லை என்பதற்காக நோயாளிகளை திருப்பி அனுப்பகூடாது என்ற கொள்கையை கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.