10 அடி நீளமுள்ள முதலை ஒன்று மிகவும் நிதானமாக
வீட்டுக்குள் நடந்துவந்த வீடியோ காண்போரைப் பீதியில்
உறைய வைக்கிறது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் மிகப்பெரிய
முதலை ஒன்று அங்குள்ள ஹாரிங்டன் ஏரியை நோக்கி
வந்துகொண்டிருந்தது. அது வந்த பாதை மக்கள் குடியிருப்புப்
பகுதி என்பதால், முதலை வருவதைக் கவனித்தவர்கள்
ஃபுளோரிடா மீன் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு
ஆணையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
முதலை ஊர்ந்து வந்த நாள் ஈஸ்டர் பண்டிகை தினம் என்பதால்,
ஏராளமான மக்கள் அவரவர் வீட்டு முற்றத்தில் கூடி கொண்டாடு
வதற்குத் தயாராக இருந்தனர். ஆனால், முதலை அப்போது
வீடுகளின்முன் மிக மெதுவாக நடந்துவந்துகொண்டிருந்ததால்,
அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிக்
கொண்டு பீதியிலேயே அமைதியாக இருந்தனர்.
யாரும் வரவேற்கவில்லை என்ற கோபமோ என்னவோ வருத்தத்தில்
ஹாரிங்டன் ஏரிக்குள் சென்று அடைக்கலமாகிவிட்டது அந்த முதலை.
அதன்பின்னரே நிம்மதிப் பெருமூச்சு விடத்தொடங்கினர் அங்குள்ளக்
குடியிருப்புவாசிகள்.