Tuesday, May 13, 2025

கண்முடித்தமான பெற்றோர்கள் பாசம்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அதிலும் சில பெற்றோர்கள் கண்முடித்தனமான பாசத்தையும் , பிள்ளைகளை பாதுகாப்பதிலும் உறுதியாய் இருப்பார்கள்.

அதுவே , சில நேரங்களில் தவறு செய்யும் பிள்ளைகளுக்கு சாதகமாக்கி விடுகிறது.இந்த சம்பவம் போல..

அமெரிக்காவின்  வெர்மான்ட் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டுவந்த இளைஞரை கைது செய்ய காவலர்கள் அவனின் வீட்டிற்கு சென்றபோது,தன் மகன் மீது உள்ள கண்முடித்தனமான பாசத்தால் காவலர்களை தடுக்க முயற்சித்துள்ளனர் அவனின் பெற்றோர்.

அவனின் தாய் காவலர்களை தடுக்க முயர்ச்சிக்க, அவனின் தந்தையோ ஒருபடி மேலே போய் ” மண்தோண்டும் இயந்திரம்” கொண்டுவந்து காவலர்களை தாக்க முயற்சிக்கிறார்.பணியில் காவலர்களுக்கு ஏற்படும் இது போன்ற ஆபத்தான சூழலை வெளிப்படுத்தும் விதம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது     வெர்மான்ட் காவல்நிலையம்.

Latest news