3 பாம்புகளுடன் விளையாடிய இளைஞரை
ஒரு பாம்பு கொத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பாம்பு என்றாலே படையும் நடுங்குவது இயல்பான ஒன்று.
ஆனால், அரிதினும் அரிதாக சில பச்சிளங் குழந்தைகள்
எவ்விதப் பயமும் தயக்கமும் இன்றி பாம்பைப் பிடித்து
விளையாடுவதைப் பார்த்து அதிர்ச்சி விலகாமல் ரசித்திருக்கிறோம்.
சிலர் பாம்பை வைத்து வித்தை காட்டுவதையும் மிரட்சியோடு
வேடிக்கை பார்த்திருக்கிறோம்.
ஆனால், எந்தத் தயக்கமும் இன்றி கர்நாடகாவைச் சேர்ந்த சயீத்
என்ற 20 வயது பாம்பு ஆர்வலர் 3 நாகப் பாம்புகளுடன் விளையாடத்
தொடங்கிய செயல் இவற்றிலிருந்து மாறுபட்ட ரகமாக உள்ளது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோக் காட்சியில், விவசாய நிலத்தில் முழங்காலிட்டு
அமர்ந்துகொண்ட அந்த இளைஞர், தனது முன்பு 3 நாகப் பாம்பு
களைக் கொண்டுவந்து விளையாட ஆரம்பிக்கும் காட்சி இடம்
பெற்றுள்ளது.
முதலில் பாம்பின் வாலைப் பிடித்து வட்டவடிவமாக்கினார்.
அவரது முன்பு 3 நாகப்பாம்களும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது
போல நின்றுகொண்டு, படமெடுத்தபடி ஆடத் தொடங்கின.
அவற்றின் அசைவுக்கேற்ப அந்த இளைஞரும் தனது கைகால்
களை அசைத்து ஆடுவதுபோல பாவனை செய்யத் தொடங்கினார்.
அப்போது சட்டென்று ஒரு பாம்பு அவரது முழங்காலில் கொத்தியது.
கொத்தியதோடு விட்டுவிடாமல், அவரது பேன்டை இறுக்கிப் பிடித்துக்
கொண்டது. சிறிதுநேரப் போராட்டத்துக்குப் பின்பு பாம்புப் பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக்கொண்டார் அந்த இளைஞர்.
பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து
பிழைத்துக்கொண்டார் அந்த பாம்பு ஆர்வலர்.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது.
சாகஸம் செய்ய விரும்பி சாவின் விளிம்புக்கு சென்றுவந்துள்ள
இளைஞரைப் பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.