Thursday, December 26, 2024

பட்டாணியைக் கொண்டுசென்ற IPS அதிகாரி
ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தம்

சூட்கேஸ் நிறைய பச்சைப் பட்டாணி கொண்டுசென்ற
ஐபிஎஸ் அதிகாரி விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்ட
சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.

ஒரிசா மாநிலப் போக்குவரத்து ஆணையர் அருண் போத்ரா
சில மாதங்களுக்குமுன்பு ஜெய்ப்பூரிலிருந்து புவனேஸ்வருக்குச்
சென்றார். தன்னுடன் சூட்கேஸ் ஒன்றையும் வைத்திருந்தார்.

விமான நிலையத்தில் அருண் போத்ராவைப் பரிசோதித்த
விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள், சூட்கேஸைத்
திறந்து காண்பிக்கும்படி கண்டிப்புடன் கூறினர்.

உடனே சூட்கேஸைத் திறந்து காண்பித்தார் அருண் போத்ரா.
அதைப் பார்த்த பாதுகாப்பு ஊழியர்கள் நெளியத் தொடங்கினர்.
காரணம், சூட்கேஸ் முழுவதும் பச்சைப் பட்டாணி இருந்ததுதான்.
வெட்கமாய்ப் போனது விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்களுக்கு.

நெளியும் அவர்களை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார் அருண் போத்ரா.
அப்புறமென்ன ரூட் கிளியர்தான்.

இதுபற்றித் தனது ட்டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அருண் போத்ரா,
”ஒரு கிலோ பட்டாணி 40 ரூபாய் என்கிற விலையில் கிடைத்ததால்
மொத்தம் 10 கிலோ வாங்கி சூட்கேஸில் வைத்துக்கொண்டு ஜெய்ப்பூர்
விமான நிலையத்துக்குச் சென்றேன். அங்கு பாதுகாப்பு ஊழியர்கள்
என் சூட்கேஸைத் திறந்துகாண்பிக்கும்படி கூறினர்” என்று
வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான காவல்துறை அதிகாரியாக இருந்தாலும்,
வீட்டைப் பற்றிய சிந்தனையும் இரக்கமும் அவருக்குள்
நிறைந்திருப்பதை எண்ணி பலரும் பாராட்டி வருகின்றனர்…

Latest news