Friday, January 3, 2025

மஞ்சள் முகமே வருக

வாழ்நாள் முழுசும் இந்தியர்கள் பயன்படுத்தும்
ஓர் உணவுப் பொருள் மஞ்சள்தான்.

அன்றாட உணவுக்கு மட்டுமல்லாம, உடம்பிலும்
பயன்படுத்தும் பொருளாவும் தொடர்ந்து இருந்து வருது.

பெண்கள் பூப்பெய்திய நாள்முதல் மஞ்சள்பூசிக்
குளிக்கும் வழக்கம் இந்தியா முழுதும் காலங்காலமாக
தொடர்ந்து வருது. பூப்பெய்திய பிறவு ஏற்படும் ஹார்மோன்
சுரப்பி மாற்றத்தினால பெண்களின் முகத்தில ரோமங்கள்
வளரத் தொடங்கும். ஆண்களைப்போல் மீசையும் வளரத் தொடங்கும்.

அப்புறமென்ன…

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பான்னு கிராமத்துல சொல்வாங்க.
எல்லாரும் சித்தப்பா ஆயிட்டா அத்தைக்கு எங்க போறதாம்….

அத்தைங்கற சொந்தமே இல்லாம போயிடுமே…அத்தை மகள்,
அத்தை மகன் உறவெல்லாம் காணாம போயிடுமே.. அதனால
சடங்கான எல்லாப் பெண்களும் இனிமே தவறாம கஸ்தூரி
மஞ்சள் பூசிக் குளிங்க… சரியா… ஏன்னா…

முகத்தில மட்டுமல்லாம கால்கள்லயும், கைகள்லயும்
ரோமங்கள் வளரத் தொடங்கும். வேறுசில இடங்கள்லயும்
வளரும். இப்படி ரோமங்கள் வளரும் பெண்கள் ஆண்களைப்
போல் தோற்றமளிப்பாங்க.

இது அவங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.
இந்த மாதிரி ரோமங்கள் வளர்வதைத் தடுக்கத்தான் தினமும்
மஞ்சள்பூசிக் குளிச்சாங்க. இதனால முகமும் பளபளன்னு ஜொலிக்கும்.
தோல் சுருக்கமும் வராது. இளமையா பொலிவா இருக்கும்.

உடல்ல உள்ள அதிகப்படியான உஷ்ணமும் கட்டுப்படுத்தப்படுது.
கால்கள்ல மஞ்சள் பூசுவதால பித்தவெடிப்பு, சேத்துப்புண் வராது.
தொற்று நோயும் அண்டாது. ஆனா… கடந்த பல வருஷமா மஞ்சள்
பூசிக் குளிப்பது இளம்பெண்கள் மத்தியில ஒரு நாகரிகமற்ற செயலா
கருதப்படுது.

அப்புறம் ஆயிரக் கணக்குல செலவு செஞ்சு அழகுக் கிரீம்கள
முகத்துல பூசி அலர்ஜியால மொகமே அலங்கோலமாயிடுது.

இப்ப அழகுங்கறத் தாண்டி உயிர் காக்கும் மருந்தாகவும்
உணரப்பட்டுள்ளது மஞ்சள்.

கொரோனா பாதிக்காமலிருக்க, கொரோனா பாதிப்பிலிருந்து
விடுபட ஏதோ ஒருவகையில மஞ்சள் பயன்படுது. ஒரு டம்ளர்
வெந்நீரில கொஞ்சம் மஞ்சப் பொடியக் கலந்து இளஞ்சூட்ல
டீக்குடிப்பதுபோல உறிஞ்சீ உறிஞ்சீ குடிச்சா தொண்டைக்கும்
இதமா இருக்கும்.

தொண்டையில இருக்கற சளியும் கரைஞ்சு குடல்வழியா
வெளிய போய்ரும். கொரோனாவுக்கும் இருக்க இடம் கிடைக்காது.

என்னது கொரோனாவுக்கு எடம் கெடைக்காதா…

எப்படின்னு வௌக்கமா சொல்லுங்கன்னு கேக்கற உங்க
மைன்ட் வாய்ஸ் எனக்கும் கேக்குது.

கொரோனா ஒருத்தர் உடம்புக்குள்ள புகுந்தா மொதல்ல
அது தங்கியிருக்கற எடம் தொண்டையில இருக்கற சளியில
தானாம். அப்புறமாத்தான் நுரையீரல் உள்ளுக்குள்ள போயிடுதாம்.
அதனால தொண்டையில கொரோனா இருக்கறதுக்கு எடம்
இல்லாம பண்ணீட்டா…
எப்படி நம்ம ஐடியா…

இத போன வருஷமே நம்ம டாக்டர்கள்தான் சொன்னாங்க…

வேப்பங்குச்சிய இன்னைக்கும் மறக்காம இருக்கோம். காரணம்,
அதுதான் நமக்கு செலவில்லாத டூத்பிரஷ்.

தெனம் தெனம் புதுசா புதுசா பயன்படுத்த பிரஷ்- பயன்படுத்திட்டுத்
தூக்கியெறியுற டூத்பிரஷ்- வேப்பங்குச்சிய மட்டுந்தான் தெனமும் பல்
துலக்கப் பயன்படுத்துறோம். ஆனா, வேப்பிலையோட பயன்கள்
எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தும் பயன்படுத்தாம இருக்கோம்.

டாக்டர் வந்து சொன்னாதான் பயன்படுத்தணுமா… இப்ப கொரோனா
வந்து சொல்லுது.

வேப்பிலைச் சாறு வாரத்துல ஒரு நாளாவது குடிச்சிட்டு
வந்தா கொரோனா தாக்காதாம்.

சக்கரை வியாதிக்காரங்க மட்டுந்தான் அப்பப்ப வேப்பிலைச்
சாறு குடிக்கிறாங்க… சின்னக் குழந்தைங்களுக்கு நாடாப்புழுவ
குடல்லருந்து நீக்கறதுக்கு வேப்பிலைப் பொடி உருண்டதான
கொடுக்கறோம்… ஆனா… திடீர் விருந்தாளியா கொரோனா
விருந்து வைச்சு வரவேத்துக்கிட்டு இருக்கோம். விருந்து வைச்சு
விருந்தாளிக்கு இரையாகிப் போறோம்…

மனுஷ உயிர்னா அவ்வளவு எழக்காரமா போச்சு நமக்கு
நம்ம உடம்புக்குள்ள கொரோனா புகுந்துடாம இருக்கணும்ன்னா
அதுக்கு முன்னாடியே வேப்பிலைச் சாற கொஞ்சம் நம்ம ஒடம்புக்குள்ள
அனுப்பி உயிரக் காப்பாத்திக்குவோம்.

உடம்புக்குள்ள மட்டுமல்ல, நம்ம வீட்டு முற்றத்துல, நம்ம வீட்டு
வாசல்ல, நம்ம வீட்டுக்குள்ள கொரோனா நுழைஞ்சிடாம தடுக்க
சுலபமான வழி…

வேப்பிலைச் சாறையும் மஞ்சள் பொடியையும் கலந்து தெனமும்
காலைலயும் சாயங்காலமும் தெளிச்சா கொரோனா பரவுறதுக்கு
வழியில்லாம போயி… நம்ம உயிருக்கு பாதுகாப்பா அமையும்.

கொரோனா வந்து லட்சக்கணக்குல செலவு பண்ணியும் ஆக்ஸிஜன்
கிடைக்கல, மருந்து கிடைக்கல, ஆஸ்பத்தியில பெட் இல்லன்னு சொல்லி
அவஸ்தைப் படுறதுக்குப் பதிலா ரொம்ப சிம்பிளா
செலவில்லா வழிய பின்பத்தி ஆரோக்யமா வாழ்ந்து உயிரக்
காப்பாத்திக்குவோமா…..

Latest news