உரிமையாளரை நோக்கிவந்த துப்பாக்கி குண்டு; பாய்ந்து உயிரை கொடுத்த “நாய்”

339
Advertisement

மனிதனின் சிறந்த மற்றும் விசுவாசமான செல்லப்பிராணி என்றால் அது “நாய்கள்” தான்.உரிமையாளர் மீது அபரிவித்த பாசத்தை காட்டும் இந்த ஜீவன்.

உ.பி.யில் இதனை நிரூபித்து மனதை உடைக்கும்  சம்பவம்  ஒன்று  நடந்துள்ளது.  உ.பி.யின் சுல்தான்பூர் மாவட்டத்தின் கோட்வாலி கிராமத்தில்வசித்து வரும் விஷால் ஸ்ரீவஸ்தவா என்பவர்   கிராமத்திற்கு வெளியே தோட்டத்தில் மாட்டு தொழுவத்தை நடத்தி வருகிறார். கால்நடை சேவையுடன், மாட்டு சாணம் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

அவரது தோட்டத்துக்குப் பின்புறம் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்  விஷால் கால்நடைக் கொட்டகையை ஒட்டி, வைக்கோல் வைக்க தகரக் கொட்டகைகள் அமைத்தார்.சம்பவ இடத்திற்கு வந்த கல்லுரியின் மேலாளர் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் ,கைகலப்பாக மாற,விஷால் காவல்துறைக்கு போன் செய்துள்ளார்.காவலர்களும் வந்து சமாதானம் செய்துவிட்டு சென்றுவிட்டனர்.அதன் பின் கோவத்தில் இருந்த மேலாளர் தன்னிடம் உரிமம் உடன் இருக்கும் துப்பாக்கியால் விஷாலை சுட்டதாக சொல்லப்படுகிறது.

விஷால் சுதாரிச்சுக்கொள்ள,அவரின் வளர்ப்பு வாயை இடையே பாய்ந்ததாகவும்.மேலாளர் கோவத்தில் நாயை சுட்டதாக தெரிகிறது.இதில் , அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் நாய் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தது.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.