2009அம் ஆண்டில் இருந்தே cryptocurrency பண பரிவர்த்தனை முறை துவங்கி விட்டாலும் கூட அண்மை காலங்களில் இருக்கும் மதிப்பும் பிரபலமும் அப்போது கிரிப்டோ பணத்துக்கு இல்லை.
உதாரணத்துக்கு, 2010ஆம் ஆண்டில் 2 பீட்ஸா வாங்குவதற்கு 10,000 bitcoinகள் தேவைப்பட்ட நிலையில், இன்று அதே அளவு Bitcoinகள் 100 மில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு பெறும்.
Bitcoin வந்த புதிதில் வெறும் 1000 டாலர் முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பில் அந்த முதலீடு 36 மில்லியனுக்கு நிகராக வளர்ந்திருக்கும்.
இவ்வாறு முதலீட்டாளர்களை கவரும் அம்சங்களை கொண்டுள்ள cryptocurrency நிறுவனங்களுக்கு அரசுகள் பொறுப்பேற்பதில்லை. மாறாக, ஒவ்வொரு நாடும் பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் cryptocurrency வர்த்தகத்தை நெறிப்படுத்த முயற்சித்து வருகின்றது.
அண்மையில், கிரிப்டோ மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இரு நபர்களை கைது செய்து 3.6 பில்லியன் மதிப்புள்ள Bitcoinகளை பறிமுதல் செய்துள்ளனர் அமெரிக்க போலீசார்.
பல மர்ம முடிச்சுகளை இயல்பான தன்மையாக கொண்டிருக்கும் Bitcoin பாதுகாப்பானதா, நம்பகத்தன்மை வாய்ந்ததா போன்ற கேள்விகள் வர்த்தக உலகில் விவாதப்பொருளாகவே தொடர்கிறது.
இந்நிலையில், கிரிப்டோ முதலீடு பற்றிய தொடர் விளம்பரங்கள் மக்களிடையே உருவாக்கி உள்ள மனநிலையை குறிவைத்து பல போலி நிறுவனங்களும் தனி நபர்களும் களம் இறங்குகின்றனர்.
இது குறித்து அமெரிக்காவின் Federal வர்த்தக ஆணையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து 46,000க்கும் மேல் மக்கள் 1 பில்லியன் டாலர் பணத்தை கிரிப்டோ சார்ந்த மோசடிகளில் இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட பெரும்பாலான கிரிப்டோ மோசடிகள் சமூகவலைதளத்தின் வழியாக நடப்பதாக கூறும் பொருளாதார நிபுணர்கள், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசிக்காமல் செய்யும் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்துகின்றனர்.