Saturday, December 21, 2024

வெப்ப நாடுகளின் ஆப்பிள்

கோடைக்காலத்தில் விளையும் பழங்களுள்
கொய்யாப் பழமும் ஒன்று.

கொய்யாப் பழம் பழங்களின் ராணியாகவும்
ஏழைகளின் பழமாகவும் கருதப்படுகிறது.
வெப்ப நாடுகளின் ஆப்பிள் என கொய்யாப்
பழம் வர்ணிக்கப்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால்,
டைப் 2 வகை நீரிழிவுக் குறைபாட்டைக் கொய்யாப்
பழம் போக்குவதாகவும், கல்லீரல், மண்ணீரல்
ஆகியவற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்துவதாகவும்,
இவ்வுறுப்புகளை வலுப்படுத்துவதாகவும் நம்பிக்கை உள்ளது.

செரிமானக் கோளாறுகளை அகற்றி செரிமான
உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலைப்
போக்கும் மாமருந்து கொய்யாப் பழம் என்பது நமக்கெல்லாம்
தெரிந்ததுதானே…

கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
இதுதவிர, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம்,
மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகளும் உள்ளன.

கொய்யாப் பழம் உண்போருக்கு புற்றுநோய் வருவதற்கான
வாய்ப்புகள் மிகவும் குறைவு. மார்பகப் புற்றுநோயும் வராதாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகக் கொய்யாப்
பழம் உள்ளது. வயிற்றில் வளரும் கருவுக்கும் கண்
குறைபாட்டை நீக்குகிறதாம்.

குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சரியாக
செயல்பட கொய்யாப் பழம் உதவுவதாகச் சொல்கிறார்கள்.

முதுமைத் தோற்றத்தைப் போக்கி முகப்பொலிவையும்
இளமையையும் அழகான தோற்றத்தையும் தருகிறது.

புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பைக்
கொய்யாப் பழம் சாப்பிட்டு சரிசெய்துகொள்ளலாம்.

தொடர்ந்து கொய்யாப் பழம் உண்டுவந்தால், மது அருந்தும்
பழக்கத்திலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் பலன் அடைந்தவர்கள்.

குடல்புண்ணைக் குணப்படுத்துவதிலும் சிறப்பான
பங்காற்றுகிறது கொய்யாப் பழம்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் எடையைக்
குறைக்க விரும்புவோர் கொய்யாப் பழத்தை சாப்பிடலாம்.

ரத்த சோகையைப் போக்குவதிலும் ரத்த அழுத்தத்தை
சீர்செய்வதிலும் கொய்யாவுக்கு தனியிடம் உள்ளது.

தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுங்க. திடகாத்திரமா
இருங்க. சந்தோஷமா வாழுங்க.

Latest news