இனிப்பு, துவர்ப்பு என மாறுபட்ட இரண்டு சுவைகொண்ட
ஒரே பழம் கொட்டாம்பழம்தான்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்
பகுதியில் கொட்டாம்பழ மரங்கள் அதிகளவில் உள்ளன.
நகருக்குள்ளும் கொட்டாம்பழ மரங்கள் நிறைய
வளர்க்கப்படுகின்றன.
இந்தக் கொட்டாம்பழத்தின் சிறப்பே இரண்டு சுவைகள்
கொண்டது என்பதுதான். அதாவது, ஒரே பழத்தில் இருவேறு
சுவைகள் உள்ளது.
பழங்கள் பொதுவாக இனிப்பாகத்தானே இருக்கும்…
அரிதாக சில பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருக்கும்.
கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் சத்துகள் அபரிமிதமாக
கொட்டாம்பழத்தில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தித் திறன்,
ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இப்பழத்தில் நிறைய
உள்ளன.
மருத்துவக் குணங்கள் நிரம்பிய கொட்டாம் பழ மரங்களின்
எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டன.
டிசம்பர் மாதத்தில் பூத்து, மார்ச் மாதத்தில் பழுக்கத் தொடங்கி,
மே மாதத்தில் உண்பதற்குத் தயாராகிவிடும்.
இனி, கொடைக்கானல் சென்றால் கொட்டாம்பழத்தைக் கேட்டு
வாங்கி சாப்பிடுங்கள். கொட்டாம்பழ சுவையை ரசித்து உண்டு
ஆரோக்கியத்தையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.
அத்தோடு கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கிலே
நான் ரொட்டியத்தான் திம்பேனா குட்டியத்தான் பாப்பேனா எனப்
பாடி மகிழுங்கள்.