தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில்
பிறந்தவர் மகேந்திர சிங் டோனி. ஆரம்பத்தில் புட்பால்
பிளேயராக இருந்தவர். பிறகு கிரிக்கெட் பிளேயராகி
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக உயர்ந்தவர்.
எப்போதும் மீசையின்றி வடஇந்திய சினிமா ஹீரோபோல்
பளிச்சென்று இருப்பார். ஆனால், அண்மையில் தனது
ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில்
இளைஞரைப்போல் மீசை வைத்து கம்பீரமாகக் காணப்படுகிறார்.
கொரோனா ஊரடங்கில் ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், சிம்லாவுக்கு
குடும்பத்துடன் சென்று பொழுதைக் கழித்து வந்தார்.
அங்கு அவரைக் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் சேர்ந்து
புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். 39 வயதாகும் டோனி இந்தப்
புகைப்படத்தில் டீ சர்ட் அணிந்து, தமிழக இளம் ஐபிஎஸ் ஆபீசரைப்போல்
மீசை வைத்துக் கம்பீரத் தோற்றத்துடன் இருக்கிறார்.
மற்றொரு புகைப்படத்தில் இமாச்சலப்பிரதேசப் பாணியில் தலையில்
தொப்பி அணிந்து கையில் கிரிக்கெட் மட்டையைத் தாங்கிப் பிடித்தபடி
ரசிகருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
பொதுவாக, தென்னிந்திய இளைஞர்கள்தான் மீசை வைத்திருப்பதை
ஆண்மையின் அடையாளமாகவும், அழகின் வடிவாகவும் கருதுவர்.
வட இந்தியர்கள் இதற்கு நேர் எதிர். அந்த வகையில் இந்தியக் கிரிக்கெட்
அணிக் கேப்டனாக இருந்த மகேந்தர் சிங் டோனி தமிழக இளைஞரைப்போல்
மீசையுடன் இருக்கும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர்.