Friday, December 27, 2024

7 முறை நிறம் மாறிய பச்சோந்தி

அடிக்கடி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர்களைப்
பச்சோந்தி என்ற குறிப்பிடுவோம்.

பச்சோந்தி ஒன்று நிறம் மாறும் வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தாம் இருக்கும் இடத்துக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும்
பச்சோந்திகள் அடிப்படையில் பச்சை நிறத்தில் காணப்படும்.
பயந்த சுபாவம் கொண்டவை பச்சோந்திகள்.

பச்சோந்திக்கு காகம், கழுகுகளால் ஆபத்து அதிகம்.
இவற்றால் ஆபத்து ஏற்பட்டால் தன் உயிரை அவற்றிடமிருந்து
காப்பாற்றிக்கொள்ளத் தன் நிறத்தை ஒரு நிமிடத்துக்குமேல்
அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும்.

அதுமட்டுமல்ல, தன் உருவைப் பெரிதாக்கவோ சிறிதாக்கவோ
செய்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. உடலிலுள்ள வெப்பத்தை
சமநிலையில் வைத்திருக்க நிறம் மாற்றும் தந்திரத்தைக்
கையாள்கின்றன என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இரையை வேட்டையாடவும் நிறம் மாற்றும் வழக்கத்தைக்
கொண்டுள்ளன. இதனால் இரையை வேட்டையாடுவது பச்சோந்திக்கு
எளிதாகிறது. பச்சோந்திகளின் தோலில் இரட்டை அடுக்குகொண்ட
போட்டோனிக் கிரிஸ்டல்கள் அதாவது, ஒளிரும் படிகங்கள் உள்ளதை
விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தப்
படிகங்கள்தான் அடிக்கடி நிறம்மாற உதவுகின்றன.

பச்சோந்திக்கு உள்ள இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா….?

ஒரு கண்ணால் ஓரிடத்தையும் மற்றொரு கண்ணால்
வேறொரு இடத்தையும் பார்க்கும் திறன் கொண்டவை பச்சோந்திகள்.

பச்சோந்திகள் எவ்விதப் பதற்றமும் இல்லாமல் இருக்கும்போது
நீலநிற ஒளியைப் பிரதிபலிக்கின்றன என்பதை விஞ்ஞானிகள்
உணர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ ஒரிஜினல் இல்லையென்று தொழில்நுட்பம்
தெரிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், நிறம் மாறும் இந்தப்
பச்சோந்தியின் செயலைப் பார்ப்பதற்கு ரசனையாக உள்ளது.

ஓ-..மனிதர்களே….பச்சோந்தியைப் போல் எல்லா விஷயங்களிலும்
இல்லாமல், இந்த ஒரு விஷயத்திலாவது இருப்போம். அதாவது,
பதற்றமில்லாமல் வாழ்ந்து சுகர், பிரஷர் போன்ற நிரந்தரக் குறைபாட்டை
ஏற்படுத்திக்கொள்ளாமல் நம்மை நாமே காத்துக்கொள்வோம்.

Latest news