Thursday, December 26, 2024

முகச் சுருக்கத்தைப் போக்கி இளமை ததும்பச் செய்யும் அதிசய மூலிகை

எல்லாரும் இளமைத் தோற்றத்தோடுதான் இருக்க விரும்புவோம்.
எத்தனை வயதானாலும் முகச் சுருக்கத்தையோ, தோல் சுருக்கத்தையோ
யாரும் விரும்புவதில்லை. ஒருவருக்கு எத்தனை வயது என்பதை அவரின்
முகம் காட்டிக்கொடுத்துவிடும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படத்
தொடங்கினால் வயதாகிவிட்டது என அர்த்தம்.

என்னதான் முகத்தில் கிரீம் பூசினாலும் தற்காலிகமாக ஒரு நாளுக்கோ
சில நாட்களுக்கோ தோல் சுருக்கங்களை மறைக்கலாம். ஆனால், நீண்ட
காலம் முகத்தில் தோல் சுருக்கம் ஏற்படாமலிருக்க மருத்துவத்தில்
வழியில்லை. எனினும் இயற்கையான முறையில் முகச் சுருக்கத்தைப்
போக்க செலவில்லா வழியுள்ளது.

அந்த வழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்…

கொய்யா இலைதான் அந்த வழி.

கொய்யா இலைகளைக் காயவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
இதைத் தண்ணீரில் பேஸ்ட்போலக் குழைத்து முகத்தில் தொடர்ந்து
பூசிவந்தால் முகச் சுருக்கங்கள் மறையும். இளமை ததும்பும்.

கற்றாழைச் சாறுடன் கொய்யா இலையை அரைத்து பூசிவந்தால்
முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.

கொய்யா இலைகளுடன் பாதாம் பருப்பு சேர்த்து அரைத்து பூசிவந்தால்,
முகத்தில் புதிய செல்கள் உற்பத்தியாகி முக அழகு கூடும்.

கொய்யா இலையை அரைத்து முகப்பருக்கள்மீது பூசிவந்தால்,
பரு நீங்கி முகம் பளபளப்பாகும். முகப்பரு தோன்றுவதற்கு முக்கியக்
காரணம் முகத் தோலின் துளைகளிலுள்ள அழுக்குகள்தான்.

சிலருக்கு முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதால் முகப்பரு
உண்டாகும். அடிக்கடி முகத்தைக் கழுவி சுத்தமாக வைத்திருந்தால்,
முகப்பரு தோன்றாது. கொய்யா இலையில் பாக்டீரியாக்களைக் கொல்லும்
தன்மை உள்ளது.

வாரம் இருமுறை முகத்திற்கு ஆவி பிடித்தால், முகத்தில் உள்ள கிருமி,
அழுக்குகள் வெளியேற்றப்பட்டுவிடும். முகப்பருவும் தோன்றாது. அதிகளவு
எண்ணெய் சுரப்பதும் கட்டுப்படுத்தப்படும்.

அப்புறமென்ன ராஜா ராணிகளே……உங்களை அழகோவியம் ஆக்கிடுங்கள்,
சந்தோஷமாக உலவுங்கள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிடுங்கள்.
உங்கள் குடும்ப மருத்துவரிடம் இதுபற்றிக் கலந்தாலோசித்து செயல்படுங்கள்.

Latest news