சிறுவயது முதல் நாம் கேட்கும் அறிவுரை வாசகங்களில் ஒன்று ‘தப்பு செஞ்ச சாமி கண்ணை குத்திடும்’ என்ற வரிகள்.வளரும் வயதில் எந்த தப்பும் செய்யக்கூடாது என்பதற்க்காக பெரியவர்கள் இதை சொல்லிசொல்லி வளர்ப்பார்கள்.
இந்த வரிகள் சில திரைப்படங்களில் வேடிக்கையாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கும்.இதனை உண்மையாக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் மே 9 தேதி இரவு தருன்ஹாவில் உள்ள பழமையான பாலாஜி கோவிலில் இருந்து பல கோடி மதிப்பிலான 16 அஷ்டதாது சிலைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு திருடர்களை தேடிவருகின்றனர்.
இந்நிலையில், சினிமா கதைகளில் வேடிக்கையாக காட்சி அமைத்தது போல திருடர்களுக்கு இங்கு உண்மையாகவே நடந்துள்ளது.
திருடர்களை தேடிவரும் நிலையில் ,திருடிச் சென்ற சிலைகளில் 14 சிலைகளை கோவிலின் தலைமை அர்ச்சகரின் வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை விட்டுச் சென்றனர் திருடர்கள்.
திருடிச்சென்ற சிலைகளை மீண்டும் கொண்டுவந்து வைத்தற்கான காரணத்தை விவரித்த திருடர்கள், குற்றத்தைச் செய்த பிறகு தங்களுக்குப் பயங்கரக் கனவுகள் வருவதாகவும், தூக்கம் வரவில்லை என்றும் கடிதம் எழுதி சிலையுடன் வைத்துள்ளனர்.
தற்போது 14 ‘அஷ்டதாது’ (எட்டு உலோகங்களால் ஆனது) சிலைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திருவிக்கப்பட்டு உள்ளது.