Sunday, July 20, 2025

RICKSHAW வைத் தோட்டமாக மாற்றிய டிரைவர்

ரிக் ஷா டிரைவர் ஒருவர் வெயிலை சமாளிப்பதற்காகத்
தனது ரிக் ஷா வைப் பூந்தோட்டமாக மாற்றி வலம்வந்துகொண்டிருக்கிறார்.

காட்டை அழித்துக் காங்க்ரீட் கட்டடங்களைக் கட்டிக்கொண்டிருக்கும்
இந்தக் காலத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர்
தனது ரிக் ஷாவையே தோட்டமாக மாற்றியுள்ளார்.

இதற்காக ரிக் ஷாவின் மேற்பகுதியில் புல்லை அழகாக அடுக்கிவைத்துள்ளார்.
அத்துடன் சிறிய மண்தொட்டிகளை ரிக் ஷாவில் வைத்து அதில் செடிகொடிகளை
வளர்த்துப் பசுந்தோட்டமாக மாற்றியுள்ளார்.

மேற்கு வங்கம் சென்றால் இந்த வாகனத்தில் உட்கார்ந்துகொண்டு
ரசகுல்லாவை சுவைத்தபடியே குளுமையான பயணமாக இனிமையாக்கிக்
கொள்ளலாம்.

இனிமேல், பயணிகளுக்கும் ரிக் ஷா ஓட்டுபவருக்கும் இடையே வாய்க்கால்
தகராறு, வரப்புத் தகராறு, சில்லரைத் தகராறு வராது என நம்பலாம்.

நம்ம ஊரிலும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும்…?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news