Sunday, July 20, 2025

இனி நீருக்கடியில் WEDDING HALL  !

அனைவருக்கும் தங்கள் திருமண நிகழ்வு வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக இருக்கவேண்டும் என்பதே ஆசை.அதற்காக வித்யாசமாக எதையேனும் செய்வார்கள்.உதாரணாமாக விமானத்தில் திருமணம் , கப்பலில் திருமணம், தண்ணீர் அடியில் திருமணம் என திருமணத்தை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்றிவிடுவர்.

தற்போது , அடுத்தகட்டமாக நீருக்கடியில் திருமண ஹாலையே அறிமுகம் செய்துள்ளது  U-Boat Worx என்ற நீர்முழுகி கப்பல் நிறுவனம்.

நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட U-Boat Worx நிறுவனத்தின் அண்டர் வாட்டர் என்டர்டெயின்மென்ட் பிளாட்ஃபார்ம் ஒரு தனித்துவமான திருமண இடத்தை அறிமுகம் செய்து உள்ளது.

உணவகம் & கேசினோவுடன் கூடிய சொகுசு நீர்மூழ்கிக் கப்பல் தான் அது.இந்த  நீர்மூழ்கிக் கப்பலில் 120 விருந்தினர்களுடன் 200 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள்  நடத்தக்கூடிய வகையில்  உருவாக்கப்படவுள்ளது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் 18 மணி நேரம் வரை நீருக்கடியில் மிதக்கும் விதமும்.விருந்தினர்கள் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.மேலும் பதினான்கு ஜன்னல்கள், சுற்றுப்புறங்களை ஒளிரச் செய்ய வெளிப்புற விளக்குகள் என ஆடம்பரமாகவும்,மறக்கமுடியாத நிகழ்வாக  அமைய இந்த வசீகரமான நீர்மூழ்கு கப்பல் உருவாகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news